குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமில்லை: யோகி விளக்கம்

0
31

லக்னோ : ஆக,13
உத்திர பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.
உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஆதித்யநாத் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார். ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்குரிய தொகையை கடந்த 5 ஆம் தேதியே அரசு கொடுத்துவிட்டதாக கூறிய முதல்வர், இதில் அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here