குல்பர்காவில் ராகுல் காந்தி வாக்குறுதி

0
27
RAHUL GANDHI INTRACTTING WITH FARMERS BUSSIMEN AT BDA ENGEENING COLLEGE GULBARAGA

குல்பர்கா, பிப். 13-
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாகவும், அவைகள் களையப்படும் என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஐதராபாத் கர்நாடக பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் ஆசிர்வாத யாத்திரை நடத்தி காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வந்த ராகுல்காந்தி இன்று 4வது நாளாக ஆதரவு திரட்டினார்.
அவர் பஸ்சில் சென்ற இடமெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் தரம்சிங் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

முன்னதாக குல்பர்காவில் உள்ள புகழ்பெற்ற தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தினார். இதே போல் பொறியியல் கல்லூரியில் விவசாயிகள் வியாபாரிகள், உள்ளிட்டவர்களிடம் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் குறைகளை கூறினர். குறிப்பாக ஜிஎஸ்டி வரியால் தங்கள் வியாபாரம் படுத்துவிட்டதாகவும் தொழில் செய்ய முடியவில்லை என்றும் வியாபாரிகள் கண்ணீர் விட்டனர்.

இதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி வியாபாரிகள் மற்றும் பல்வேறு தொழில்களை நடத்தி வருபவர்கள் கவலைப்பட வேண்டாம். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்றார். மக்கள் ஆசிர்வாத பிரச்சார பயணத்தை முடித்து கொண்டு ராகுல்காந்தி இன்று பிற்பகல் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here