குற்றம் 23′ தயாரிப்பாளருடன் மீண்டும் கைகோர்க்கும் அருண் விஜய்

0
243

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘குற்றம் 23’.

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் ஹீரோக்களில் முக்கிய இடம் அருண் விஜய்க்குக் கிடைத்திருக்கிறது. எனவே அடுத்தடுத்த படங்களுக்கு அவசரப்படாமல், நல்ல கதைகளை இயக்குநர்களிடம் கேட்டு வருகிறார் அருண் விஜய்.

அடுத்து, குற்றம் 23 படத்தைத் தயாரித்த இந்தர் குமாருக்கே கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை பிரமாண்டமாய் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். முன் தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இப் படத்தை இயக்குகின்றார்.

இன்னும் பெயரிடப்படவில்லை. அருண் விஜய் – மகிழ் திருமேனியின் முதல் படம் தடையறத் தாக்க நல்ல வரவேற்பைப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here