குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால்?

0
233

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் நடித்த ‘குயின்’ படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார்.

இதையடுத்து, இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. தென்னிந்திய மொழிகளில் தமிழில் இப்படத்தை ரேவதி இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி படத்திற்கான வசனத்தை எழுதப்போவதாக கூறப்பட்டது. கூடவே, படத்தின் நாயகியாக தமன்னா நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

பின்னர், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ரேவதிக்கு பதிலாக ‘குயின்’ தமிழ் ரீமேக்கை பிரபல நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவரே கன்னடத்திலும் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம். மேலும், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், இப்படத்தில் எமி ஜாக்சனும் நாயகியின் தோழியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற மொழிகளிலும் இவரே நாயகிக்கு தோழியாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here