குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

0
27

ஓசூர்: பிப், 4
ஓசூர் அடுத்த பிகினி பகுதியில், குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த புக்கசாகரம் அருகே உள்ள நீலிவங்கா கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, விவசாயி. இவரது மகன் குமார், 13. உங்கட்டி அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பாகலூர் அடுத்த பிகினி பகுதியில் உள்ள முனிகிருஷ்ணப்பா என்பவரது விவசாய நிலத்தில் உள்ள குட்டையில், கால் கழுவுவதற்காக மாணவன் குமார் சென்றார். அப்போது கால் தவறி தண்ணீரில் விழுந்த மாணவன் நீரில் மூழ்கி பலியானான். பாகலூர் போலீசார், சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here