குடும்ப அரசியலை விரட்டி இரட்டை இலையை மீட்டு எடுப்போம்: அமைச்சர் வீரமணி பேட்டி

0
107

வேலூர்: ஏப். 21-
வேலூர் மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், ஜோலார்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்தது. நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அமைச்சர் வீரமணி பேசியதாவது: ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி யிலும், ஆட்சியிலும் பல்வேறு பிரச்னைகள் வந்தன. இதனால், தொகுதி மக்களை பார்க்கவே சங்கடப்பட்டேன். சந்தர்ப்ப சூழ்நிலையால், கொலைகார குடும்பம் ஆட்சியை கைப்பற்றியது. ஜெயலலிதாவை வைத்து, சசிகலா நடத்திய நாடகம், தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து, கொலைகார குடும்பத்தை விரட்டியுள்ளோம். கட்சி பிரிவு என்பது அண்ணன், தம்பி சண்டை போன்றது. இதை நாங்கள் சரி செய்து கொள்வோம். குடும்ப அரசியலை விரட்டி, இரட்டை இலையை மீட்டு எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் நிலோபர் கபில், எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்பிரமணியம், ஜெயந்தி, லோகநாதன், ரவி, பார்த்திபன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here