குடிபோதையில் கொலை

0
14

பெங்களூர். டிச.7-
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரசு பணியாளர் ஒருவர் வெட்டி கொலை செய்யபபட்டார்.
டிஜிபி அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் உதயகுமார்-34. இவர் மத்தூரை சேர்ந்தவர். இவருக்கு தங்க . வீடு இல்லாததால் கப்பன் பூங்கா என்ஜிஓ குடியிருப்பில் தற்காலிகமாக தங்கி இருந்தார். வீடு தேடி அலைந்து வந்தார்.

விட்டல் என்ற நபரிடம் வீடு பற்றி தெரிவித்த போது நந்தினி லே அவுட்டில் போலீஸ் குவார்ட்ரஸ் காலியாக உள்ளது வந்து பார் என்று விட்டல் சொல்லியுள்ளார்.
நந்தினி லே அவுட்டில், அரசு பணியாளர் ராஜூ என்பவர தங்கி இருந்த இடத்தை காட்டியுள்ளார்.
இதனை அறிந்த ராஜூ விட்டலிடம் தகராறு செய்திருக்கிறார்.

பின்னர் உதயகுமார், ராஜூ, விட்டல் என்ற 3 பேரும் மதுபான கடைக்கு சென்று குடித்துள்ளனர். குடிபோதையில் ராஜூவின் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். விட்டலை ராஜூ தாக்கியுள்ளார். கீழே தள்ளியுள்ளார்.
உதயகுமாரையும் பலமாக ராஜூ தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதய குமார் உயிர் இழந்தார்.
ராஜூவை போலீசார் கைது செய்தனர். ராஜூ கோகாக் நகரை சேர்ந்தவர் எனறும் அவர் விகாஸ் சவுதாவில் செக்சன் ஆபிசராகவும் பணியில் இருந்து வருகிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here