குஜராத் பிரச்சாரம் ஓய்ந்தது

0
15

புதுடில்லி, டிச. 7-
குஜராத்தில் 89 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்ந்தது. கடைசி நாளான இன்று சூரத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். குஜராத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் பிஜேபி, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கருத்து கணிப்புகள் பிஜேபி மற்றும் காங்கிரசுக்கு சாதகமாக மாறி மாறி வருகிறது. இதனால் இந்தியாவின்  மொத்த கவனத்தையும் குஜராத் தேர்தல் ஈர்த்துள்ளது. குஜராத் சட்டசபையில் 182 தொகுதிகளுக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துகிறது. வரும் 18ம்தேதி வோட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

குஜராத்தில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவருகிறது. குஜராத் சட்டசபைக்கு வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ. , காங். கட்சிகும்இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது
யார் ஆட்சியை பிடிப்பர் என்ற கேள்விக்கு மூன்று விதமான கருதது கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் மீண்டும் பா.ஜ. வே ஆட்சி பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

அதன் விவரம்
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு
மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ. 106 முதல் 116 இடங்களையும், காங்., 63 முதல் 73 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
டைம்ஸ்நெவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு
பா.ஜ. 111 இடங்களிலும் காங். 68 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவந்துள்ளது.
ஏபி.பி-சி – சி.எஸ்.டி. எஸ். வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு விவரம்:

பா.ஜ. 105 முதல் 106 இடங்களிலும், காங். 73 முதல் 74 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு அந்த கருத்து கணிப்பு வாயிலாக தெரிவருகிறது. இந்த கருத்து கணிப்புகள் வாயிலாக பா.ஜ.வின் வாக்கு சதவீதம் குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது

பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. வரலாறு காணாத வகையில் 150 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு பா.ஜ. 127 இடங்களை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடதக்கது. இந்த முறை காங். வெற்றி கனியை பறிக்க தீவிரம் காட்டிவருகிறது. தனது குடும்பத்தினர் அனைவரும் சிவபக்தர்கள் என கூறி குஜராத்தில் கோயில் கோயிலாக சென்று வரும் ராகுலின் பக்தி வேடம் இந்த தேர்தலில் எடுபடுமா என்பது ஓட்டு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here