குகை பெரிய மாரியம்மன் கோயில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

0
37

கிருஷ்ணகிரி: ஆக.13
கிருஷ்ணகிரியில், குகை பெரிய மாரியம்மன் கோயில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 7 மணிக்கு மங்கள வாத்தியம், விக்னேஸ்வர பூஜை புன்யா ஹவசனம், மகா கணபதி கலச பூஜை, நவக்கிரஹ பூஜை, அம்பாள் கலச பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அம்பாள் மூல மந்திர ஹோமம், 108 திரவிய ஹோமம் நடந்தது. அத்துடன் கலச புறப்பாடு, அம்பாள் கலச அபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் மகா தீபாராதனையுடன் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வருஷாபிஷேகத்தை வேதாகம முறைப்படி சூர்யநாராயணன் நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here