கி.கிரி மாவட்டத்தில் 128.60 மி.மீட்டர் மழை

0
88

கிருஷ்ணகிரி: ஆக,13
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில், 128.60 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மழைபெய்தது. நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, ராயக்கோட்டையில், 33 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், ஊத்தங்கரை, 27, தளி, 25, சூளகிரி, 22, தேன்கனிக்கோட்டை, 7, பெணுகொண்டாபுரம், 6.20, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி தலா, 4.20 மி.மீட்டர் என, மொத்தம், 128.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here