கிருஷ்ணகிரி சுங்கவரி சாவடியில், இரு லாரிகளை மணிக்கணக்கிகில் நிறுத்திய சுங்கசாவடியினரை கண்டித்து வியாபாரிகள் முற்றுகை

0
96

கிருஷ்ணகிரி, ஏப்.3
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியிலிருந்து கொத்தமல்லி, புதினா பாரம் ஏற்றிய இரு லாரிகள் சென்னை கோயம்மேடு மார்கெட்டுக்கு செல்வதற்காக ரகமத்துல்லா, சலிம் ஆகியோர் கிருஷ்ணகிரி சுங்கவரிச்சாவடிக்கு வந்தனர்
இவர்களின் இருலாரிகளையும் அதிக பாரம் இருப்பதாக கூறி மணிகணக்கில் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது, பொறுமை இழந்த வியாபாரிகள், கொத்தமல்லி புதினா மணிகணக்கில் நிறுத்தி வைத்தால் அனைத்தும் அழுகிவிடும், மேலும் பல லட்ச ரூபாய் வீணாகி விடும் எனவும், ஒவ்வொரு முறையும் பாரம் அதிகமாக இருப்பதாக கூறி 2 -ஆயிரம் ரூபாய் அதிகமாக கேட்பதாகவும் இதனால் பலமுறை பணம் கொடுத்ததாகவும் தற்போது பணம் தர இயலாது எனகூறி மற்ற விவசாயிகளையும் வியாபாரிகளுக்கும் தகவல் தரவே 15-க்கும் மேற்பட்டோர் சுங்க சாவடியில் கூடினர் இதனால் சுங்க சாவடியினருக்கும் வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, பிறகு சுங்கசாவடியை முற்றுகையிட வியாபாரிகள் முயற்சித்தனர், தகவல் அறிந்த தாலுக்கா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்புமணி நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார், உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்து வந்து வியாரிகளை அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்து, லாரிகளை அனுப்பி வைத்தனனர், இதனால் சுங்க வரிச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது

SHARE
Previous articleமீனம்
Next articleதனுசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here