கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

0
67

கிருஷ்ணகிரி,மே.6
கிருஷ்ணகிரியை அடுத்த பாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜாத்தி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ராஜாத்தி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாத்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ராஜாத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருண் விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here