கிருஷ்ணகிரியில் 31க்குள் விநாயகர் சிலைகளை கரைத்து விட வேண்டும்’

0
115

கிருஷ்ணகிரி, ஆக, 12
கிருஷ்ணகிரியில், விநாயகர் சிலைகளை வரும், 31க்குள் கரைத்து விட வேண்டும் என, டி.எஸ்.பி., ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில், விநாயகர் சிலை வைப்பது மற்றும் கரைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி.,ரவிக்குமார் பேசியதாவது: வரும், 25ல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகளை கரைக்க செல்லும் ஊர்வலமானது, கடந்த ஆண்டு சென்ற வழித்தடங்களிலேயே இந்த முறையும் செல்ல வேண்டும். களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். ரசாயன கலவையால் தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது. விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் அவர்களே சிலைகளை பாதுகாக்க வேண்டும். மிக எளிதாக தீப்பற்றக்கூடிய, எந்த பொருளையும் சிலை அருகில் வைக்கக்கூடாது. பூஜை நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அளவு ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும். மின்கசிவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில், சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில், சிலை அமைப்பு நிர்வாகிகள் குறைந்தது ஐந்து பேர் தங்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஊர்வலமாக செல்லும் போது, இடையூறு ஏற்படுத்தக் கூடாது. மாலை, 5:00 மணிக்குள் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை வெடிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு செல்லக்கூடாது. கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் வரும், 31க்குள் அனைத்து சிலைகளையும் கரைத்துவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், ஞானசேகரன், ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here