கிருஷ்ணகிரியில் பாபர் மசூதி இடிப்புக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

0
74

கிருஷ்ணகிரி,டிச, 7
பாபர் மசூதி இடிப்புக்கு நீதிகோரி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து பாபர் மசூதி இடிப்புக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் நூர்முஹமத் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹம்த் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் நவ்ஷாத் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான த.மு.மு.க. கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர். முடிவில் கிருஷ்ணகிரி நகர அமைப்புக்குழு உறுப்பினர் பைரோஸ் நன்றி கூறினார்.
இதேபோல எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்புக்கு நீதி வழங்ககோரி பழையபேட்டை காந்தி சிலை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்கர்அலி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ஷப்பீர் பேசினார். ஷாஜி மஸ்ஜித் தலைவர் முஷ்டாக் அஹமத், மாவட்ட பொருளாளர் ஷபியுல்லா, மாவட்ட தலைவர் முஹமத் கலீல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏஜாஸ், நகர தலைவர் ரகமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முஹமத் பயாஸ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்ட முடிவில் ஆதம் பாஷா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here