கிருஷ்ணகிரியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

0
164

கிருஷ்ணகிரி, ஏப்.20:
கிருஷ்ணகிரியில் நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ திரௌபதாம்பிகை அக்னி வசந்த மகோற்சவ மகாபாரத திருவிழா கடந்த 1ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு பூஜைகளும், அபிஷேகமும், பகல் நேரங்களில் செல்வகருணாநிதியின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதன்படி பாரத சிறப்பு, குருகுலத்திலர் ஜெனமே ஜயன் சிறப்பு, மச்சகந்தி பிறப்பு வியாசர் தோற்றம், சந்தனு கங்கை வரலாறு, திருதராட்டிரன் பாண்டு விதுரர் பிறப்பு, பாண்டவர் பிறப்பு கிருஷ்ணன் அவதாரம், வில்வரங்கேற்றமும், வீரபாஞ்சாலி தோற்றமும், அரக்கு மாளிகை இடுபமியின் ஞானகுறி, வில் வளைப்பும் நளாயினி வரலாறு, சுபத்தி்ரை மணமும் சுபராஜசூயமும், ராஜசுயாகம் சூதாட்டம், அர்சுணன் தவம், நளன் சரித்திரம் சனீஸ்வரன் தந்தவரம், கீசகன் வதம் மாடுபிர சண்டை, கண்ணபிரான் தூது விதுரர் விருந்து, அரவான் கடபலி அபிமன்யூ போர், கைலாசத்தின் கண்ணனும், அச்சுனனும், கர்ணன் கண்ட கண்ணன் காட்சி ஆகிய தலைப்புகளில் சொற்பொழி நிகழ்ச்சி நடந்தது. கலாவதியின் இன்னிசை கவிவாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 6ம் தேதி முதல் தினமும் இரவு நேரங்களில் கிருஷ்ணகிரி பூந்தோட்டம் செல்வ விநாயாகர் நாடக சபா சார்பில் ஆசிரியர் குமரவேல், மேனேஜர் சேகர் ஆகியோரது குவினரால் நாடகமும் நடந்து வந்தது. இந்நிலையில் நாடகத்தின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நாடகம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. நேற்று காலை படுகளம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். அதை தொடர்ந்து தீ மிதி விழாவும், தர்மன் திருமுடி புனைதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நாடகத்தை ரசித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஏழூரை சேர்ந்த ஊர் கவுண்டர்கள், விழா கமிட்டியினர், ஏழூர் நாட்டார் தனபால் கவுண்டர், தர்மகர்த்தா கோவிந்தகவுண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here