காவேரி வனப்பகுதியில் கொன்று குவிக்கப்படும் மான்கள்

0
82

சாமராஜ்நகர், ஜூலை 25-
சாமராஜ்நகர் மாவட்டம் ஆனூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது காவிரி மிருக சரணலாயம் இது பெங்களூருவிலிருந்து 165 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் மானின் உடல் கிடந்தது தெரியவந்தது இது மான்வேட்டையாளர்களால் கொல்லப்பட்ட மான் என்று தெரியவந்தது. மான்கறியை எடுத்து கொண்டு எலும்பு கூடுகளை விட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்த வனத்துறை அதிகாரிகிள் மான்வேட்டை ஆடியதாக மரிமங்களாவை சேர்ந்த ஜானு, சகாய கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் இருவரையும் கைது செய்தனர். மேலும் மரிமங்களாவை சேர்ந்த ராஜூ சகாயகிராமத்தை சேர்ந்த ரங்கா இருவரும் தப்பித்து தலைமறைவாக உள்ளன. கைதானவர்களிடம் ஒரு துப்பாக்கியை வனத்துறையினர் கைப்பற்றினர் என எச்.எச்.அங்கராஜ் துணை கன்சர் வேடர் கூரினார்.

கேமராக்களை இங்கு பொருத்தியுள்ளது இங்கு நடக்கும் தவறான செயல்களையும் மிருகங்களின் நடமாட்டத்தையும் நாங்கள் அறிந்து கொள்ள உதவியாக உள்ளது என்றார். எதிர்காலத்தில் இன்னும் அதிக சிசிடிவி கேமராக்களை பொருத்தவுள்ளதாகவும் அங்கராஜ் தெரிவித்தார். கைதானவர்கள் குற்றத்தை ஒப்பு கொண்டனர் என்று ஆனுர் சரக வனத்துறை அதிகாரி பி.சி.லோகேஷ் கூறினார்.

ஆனூர் காவிரி மிருக சரணாலய துணை கன்சர் வேடர் பி.ரமேஷ்குமார் தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை கடந்த 6 மாதத்தில் வேட்டைக்காரர்கள் இந்த வனப்பகுதியில் வேட்டையாடி மிருகங்களை கொன்றதாக 4 வழக்குகள் பதிவாகியுள்ளன. என ரமேஷ்குமார் கூறினார்.

வேட்டையாடுபவர்கள் பெரும் பாலும் மானையே வேட்டையாடுகின்றனர் துப்பாக்கியால் சுட்டும், விஷம் வைத்தும் மான்களை வேட்டையாடுகின்றனர் இந்த மிருக சரணலாயம் மண்டியாவிலிருந்து சாம்ராஜ்நகர் மற்றும் ராம்நகர் வரை பரவியுள்ளது புலிகள் யானைகள் தவிர 250 வகை பறவைகளும் இங்குள்ளன இங்குள்ள மலபார் காண்டாமிருகங்களே மிகவும் கொடிய மிருகம் என்று ரமேஷ்குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here