காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

0
93

தர்மபுரி: ஏப்.17
‘உயர்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள, 700 பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் வாயிற் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் பொன்.செல்வராஜ், மாநில அமைப்பு செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில், கடந்த, இரு ஆண்டுகளாக, 700க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்து வருகிறது. இதை தடுக்க, தமிழக அரசு தலைமையாசிரியர் பணியிடம் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதில், 1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 300 ரூபாயும், பறக்கும் படையினருக்கு, 350 ரூபாய் சிறப்பு படியும் வழங்க வேண்டும். தற்போது, ஒரு விடைத்தாள் திருத்த, ஏழு ரூபாய், 50 காசு வழங்கப்படுகிறது. இதை, 25 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசாணை, 720யை திருத்தம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர்கள் பேசினர். மாநில பொருளாளர் தமிழ்மணியன், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here