காரிமங்கலம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 120 பேர் மீது வழக்குப்பதிவு

0
37

காரிமங்கலம், நவ.16
தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனையில் ஈடுபடுமாறு போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையில் போலீசார், பல்வேறு குழுக்களாக பிரிந்து மாட்லாம்பட்டி பிரிவு ரோடு, பெரியாம்பட்டி, காரிமங்கலம் ராமசாமி கோவில், மொரப்பூர் ரோடு, அகரம் பிரிவு ரோடு, காரிமங்கலம் பாலக்கோடு சாலை, பொம்மஅள்ளி பிரிவு ரோடு மற்றும் அனுமந்தபுரம் என பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாகவும், மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியது, வாகன உரிமம் இல்லாமலும், வாகனத்திற்கு காப்பீடு செய்யாமல் வாகனங்களை ஓட்டியது உள்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அப்போது காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மதுகுடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here