காதல்..காதல்..காதல்..

0
19
valenties day celebration and cpuple going around lalbaga and cubbon park

பெங்களூரு, பிப். 14-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெங்களூரில் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
கப்பன்பூங்கா, லால்பாக் பூங்கா மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் காதல் ஜோடிகள் மகிழ்ச்சியாக வலம் வந்தனர்.

காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு இதுவரை எந்த எதிர்ப்போ மிரட்டலோ வரவில்லை பொதுவாக பஜ்ரங்தள் போன்ற இந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ஆனால் இந்த ஆண்டு அவர்களிடமிருந்தும் எதிர்ப்பு வரவில்லை ஆனால் எதிர்ப்பு எந்த நேரத்திலும் வரக்கூடும் என போலீசார் எண்ணுகின்றனர். இதையொட்டி மால்கள் பார்க் சினிமா தியேட்டர் ரெஸ்டாரெண்ட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறுகையில்-
இது வரை காதலர் தின கொண்டாட்டத்துக்கு எந்த எதிர்ப்பும் இல்லை ஆனாலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க அந்தந்த பகுதி டிசிபி எசிபிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது 50 நகர ஆயுதப்படை ரிசர்வ் மற்றும் சிவில் போலீசாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எந்தவித இடையூறும் காதலர் தின கொண்டாட்டத்துக்கு ஏற்படாது. அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் இரும்புகரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here