காதல் காட்சிகளில் நடிப்பதற்கு வெட்கமாக இருக்கிறது: காஜல் அகர்வால்

0
302

சினிமாவில் முத்த காட்சிகளில் நடிப்பதையும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதையும் ஒரு காலத்தில் பரபரப்பாக பேசினார்கள். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் தயங்கிய காலமும் இருந்தது. ஆனால் இப்போது அவை சகஜமாகி விட்டன. முத்த காட்சிகளும் காதல் காட்சிகளும் படங்களில் சர்வசாதாரணமாக இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. நடிகைகளும் இந்த காட்சிகளில் நடிப்பதற்கு ஆட்சேபிப்பது இல்லை.
காதல் மற்றும் முத்த காட்சிகளை ரசிகர்கள் திரையங்குகளில் சாதாரணமாக பார்த்து விட்டு போய் விடுகிறார்கள்.

ஆனால் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் படும் கஷ்டங்கள் ஏராளம். படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் லைட்மேன் முதற்கொண்டு தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் நின்று கொண்டிருப்பார்கள். டைரக்டரும் கேமராமேனும் கதாநாயகன், கதாநாயகி எப்படி நடிக்கிறார்கள் என்பதை உற்று நோக்கி கொண்டு இருப்பார்கள்.

அந்த கூட்டத்தினர் மத்தியில் குட்டைப்பாவாடை அணிந்து கவர்ச்சியாக வந்து கதாநாயகனை கட்டிப்பிடிக்க வேண்டும். அவருடன் முத்தமிட வேண்டும். இந்த காட்சிகளில் நடிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கும். சில நேரம் படப்பிடிப்பை காண ரசிகர்கள் கூட்டமும் திரண்டு விடும். ஆயிரம் பேர் மத்தியில் அந்த காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்.

சினிமாவில் நான் அறிமுகமாகி 10 வருடங்கள் தாண்டி விட்டன. அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். தற்போது அஜித்குமார் ஜோடியாக ‘விவேகம்’ படத்திலும் ராணா ஜோடியாக ‘நீனே ராஜா நானே மந்திரி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறேன். விஜய்யுடனும் நடிக்கிறேன். இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து உள்ளேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here