காதலுக்காக நண்பனை கொன்ற நண்பன்

0
11

பெங்களூரு, பிப். 14-
தனது காதலி தனது நண்பனைக் காதலிக்கிறார் என்பதையறிந்து நண்பனை கொலை செய்த சம்பவம் தொட்டபள்ளாப்பூரில் நடைபெற்றுள்ளது.

பெங்களூரு புறநகர பகுதியான தொட்டபள்ளாப்பூரை சேர்ந்தவர் 21 வயது ஹரீஷ் இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார் இந்நிலையில் ஹரீஷின் நண்பரான சந்தோஷும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக சந்தோஷ் மற்றும் ஹரீஷ் இடையில் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் கத்தியால் ஹரீஷை கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இது தொடர்பாக தகவல் பெற்ற தொட்டபள்ளாப்பூர் போலீசார் கொலை நடந்த பகுதிக்கு விரைந்து சென்று உயிரிழந்த ஹரீஷ் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை வழக்கை பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சந்தோஷைத்தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here