காச நோயாளிகள் பெங்களூரில் அதிகரிப்பு

0
21

பெங்களூரு, டிச. 7-
பெங்களூரு மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 3 நாட்களின் ஆய்வின்போது 15 காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
கர்நாடக அரசுவின் சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் காசநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட இந்த ஆய்வில் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 2500-க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

முதல் இரண்டு கட்டங்களின் ஆய்வு முடிந்து 3-வது கட்ட ஆய்வின் போது பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 15 காசநோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 218 பேர் இதர மாவட்டங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வகையில் கடந்த 20 நாட்களின் காசநோய் குறித்த ஆய்வில் 2500-க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை மாநில அரசுவின் சுகாதாரத்துறையும் ஆஷா சமூக நல மையமும் இணைந்து மேற்கொண்ட நிலையில் காசநோய் வராமல் தடுக்கும் விழிப்புணர்வை பொதுமக்களிடம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here