கற்பழிப்பை தடுத்த போலீஸ்

0
135

பெங்களூரு, ஆக.11-
பெங்களூரு போலீசாரின் உடனடி நடவடிக்கையால் இளம் பெண் பாலியல் பலாத்காரக் கொடுமையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.
பெங்களூர் எசவந்தபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்டப் பகுதியில் பயாஸ் என்பவனும் அவனது 2 நண்பர்களும் அவர்களது தேவைக்கும் மேலாக மதுவை அருந்தினர். போதையில் தள்ளாடியபடி எசவந்தபுரம் ரெயில் நிலையத்திற்குள் சென்றனர்.

இரயில் பிளாட்பாரம் ஒன்றில் அண்ணனும் தங்கையுமாக இரண்டு பேர் தங்களது ஊருக்குச் செல்ல ரெயிலின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது 3 குடிகார இளைஞர்களும் இளம்பெண் நின்று இருந்த இடத்துக்குச் சென்று அண்ணனை அடித்து இளம் பெண்ணை இழுத்துக் கொண்டு ரெயில் நிலையம் அருகே உள்ள சுற்றுலா பதிவு மையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் போட்ட குரலைக் கேட்ட ஆட்டோ டிரைவர் அஸ்கர்பாஷா என்பவரும் மற்றும் ஒருவரும் உடனடியாக எசவந்தபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் பெற்ற எசவந்தபுரம் போலீசார் ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு ஓடோடி சென்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணையும் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த பயாஸ் என்பவனையும் கைது செய்தனர்.

பிடிபட்ட பயாஸ் மீது 354 மற்றும் 363 விதிகளின் படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலை மறைவாகிவிட்ட மற்ற இரண்டு பேர்களையும் கைது செய்ய டிசிபி முத்துராஜ் மற்றும் சிவகுமார் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தலைமறைவாகி விட்ட இரண்டு பேரைத் தேடினர்.
இதில் மற்றொரு கொடூரமானவனை ஜீபார் பிடிபட்டான்.

மற்றொருவனைத் தேடி வரும் போலீசார் அவனையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர். பெங்களூர் போலீசார் உடனடியாக செயல்பட்டு 30 நிமிடங்களில் இளம்பெண் ஒருவரின் கற்பினைக் காப்பாற்றி பத்திரமாக அவரை அனுப்பி வைத்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here