கர்நாடகாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: 4 பேர் கைது

0
70

கிருஷ்ணகிரி: ஏப்.20
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, டிப்பர் லாரியில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த இருந்த, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கர்நாடகா மாநிலத்துக்கு, செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் வனத்துறையினர், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரகட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், டிப்பர் லாரிக்கு பின்னால், இண்டிகா காரில் வந்தவர்கள், செம்மரகட்டை கடத்தலுக்கு பாதுகாப்பாக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, செம்மரக்கட்டைகளுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களான, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 32, செல்வகுமார், 29, மற்றும் காரில் வந்த திருவண்ணாமலையை சேர்ந்த குணசேகரன், 31, மூர்த்தி, 27, ஆகியோரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here