கன்னட மக்களிடம் சத்யராஜ் மன்னிப்பு

0
116
capj11

சென்னை, ஏப். 21-
காவிரி பிரச்சனையின்போது கன்னடர்களை தவறாக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஒன்று கூடியுள்ளன.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல; பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.9ஆண்டுகளுக்கு பிறகு மனப்பூர்வமாக வருத்தம் கோருகிறேன்.

நான் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.என்னுடைய உதவியாளரின் தாய்மொழி கன்னடமே; உணர்வுகளை புரிந்துகொண்டு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி.
என்னால் பிரச்னை ஏற்படும் என்று கருதினால்,படம் எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என நினைத்தால் என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம்.பாகுபலி என்ற பெரிய படத்தின் சிறிய தொழிலாளி நான்; என் காரணமாக பாகுபலி திரைப்படத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல; பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
காவிரி உள்பட தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்; நடிகனாக இருப்பதைவிட தமிழனாக இருப்பதே பெருமை.
இவ்வாறு சத்யராஜ் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here