கணேசா பண்டிகை கொண்டாட கட்டுபாடு ஏதுமில்லை

0
48

பெங்களூரு, ஆக. 13-
கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாநில உள்துறை எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்று டிஜிபி தத்தா கூறினார்.
இது தொடர்பாக மாநில போலீஸ் டிஜிபி ஆர்.கே.தத்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது-

மாநில போலீஸ் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி சிலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் டிஜிபியாக ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட போலீஸ் துறை எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.

பொதுமக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வரும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிடலாம் இதற்கு கட்டுப்பாடு கிடையாது. அதே சமயத்தில் மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது வழக்கமான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சூப்பிரடண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று டிஜிபி தத்தா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here