கடகம்

0
129

இந்த வாரம் ஒவ்வொரு விஷயத்திலும் ஆரம்பத்தில் ஒன்று முடிவில் ஒன்று வேறு விதமாகவும் தங்களின் கருத்து வெளிப்படும். குழப்பமான மனநிலையோடு செயல்படுவீர்கள்.

வீண் அலைச்சல் மற்றும் அனாவசியமான டென்சன் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுதல் நலம், உணவு, உறக்கம் நேரப்படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மற்றவர்களை நம்பி சில பணிகளை ஒப்படைகின்ற போது, அவர்களின் தகுதி தராதரங்களை கருத்தில் கொள்ளுதல் நல்லது.

குழந்தைகளுக்காக கூடுதல் செலவுகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் அலைச்சல் கூடுதலாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களில் கவனம் இருக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here