ஓசூரில் இரண்டு பேர் பலி

0
18

ஓசூர்: ஜன, 10
ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ், 38, கூலித்தொழிலாளி; இவர், நேற்று மாலை, பொம்மாண்டப்பள்ளி சர்க்கிள் அருகே, கோவிந்த், 41, என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் சிமென்ட் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போபனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார், 21, இவர், ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை மருந்து பொருட்கள் எடுத்து செல்லும் லிப்டில் சென்ற போது, தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்ட சக தொழிலாளர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here