ஒற்றுமைக்கு அமித்ஷா அறிவுரை

0
44

பெங்களூரு, ஆக. 13-
பிஜேபி மூத்த தலைவரின் இரண்டாம் திருமண வீடியோ கேசட் விவகாரம் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரம்மாஸ்திரம் எனவே பிஜேபியின் 150 மிஷின் நோக்கத்தை விட உட்கட்சி மோதலை நிவர்த்தி செய்ய தேசியத்தலைவர் அமித்ஷா கட்டளையிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ள அமித்ஷா 2-வது நாளான இன்று கட்சி அலுவலகத்துக்கு 8 மணிக்குகெல்லாம் வந்து விட்டார். மாநில பிஜேபியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் அவர் கலந்துக்கொண்டு ஒற்றுமையின் மந்திரத்தை ஓதினார்.
நேற்றும் ஒற்றுமை பற்றியே உணர்த்தினார்.

கருத்து வேறுபாடுகளை களையும்படி நேரடியாக கூறினார் தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் ஒற்றுமையின்மை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை திட்டவிட்டமாக கூறினார்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து விவகாரங்களும் தமக்கு தெரியும் ஈஷ்வரப்பா உதவியாளர் வினய் கடத்தல் வழக்கு காங்கிரசுக்கு லாபம் கொடுக்கும் ஈஷ்வரப்பாவை நேரடியாகவே எச்சரித்துள்ளார்.

பிஜேபிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் செயல்பட கூடாது அவ்வாறு மீறி செயல்பட்டால் அதனை சகித்துக்கொள்ள முடியாது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் நெருங்குவதால் கட்சியின் இலட்சியம் மிக முக்கியம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here