ஒரே படத்தில் இணைந்து பணியாற்றும் சூர்யா – கார்த்தி

0
280

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அவரது தம்பி கார்த்தி. அதன்பின்னர், ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் கதாநாயகனாகி, பின்னர் பல வெற்றிகளை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சூர்யாவும், கார்த்தியும் ஒரே துறையில் பணியாற்றி வருவதால் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வந்தது. சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் கார்த்தி, நானும் சூர்யாவும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம். அதற்காக கதை கேட்டு வருகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டு பேரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள். அதாவது, சூர்யா தயாரிக்கும் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை இன்று நடைபெற்ற ‘செம’ ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ராஜசேகர் பாண்டியன் அறிவித்தார்.

கார்த்தி நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்களை தேர்வு செய்துவிட்டு படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here