எளிமையாக நடந்த நமீதா திருமணம்

0
329

திருப்பதி, நவ. 24-
திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா அவரது காதலர் வீரேந்திர சவுத்ரியை இன்று திருமணம் செய்து கொண்டார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா, வாய்ப்பு குறைந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டார்.

இருப்பினும் அதன்பிறகும் பட வாய்ப்புகள் எதுவும் வந்தபாடில்லை. இதையடுத்து, தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். நிச்சயதார்த்தம் அதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து ரசிகர்கள் நமீதாவின் திருமணத்திற்காக எதிர்பார்த்திருந்தனர். திருப்பதியில் திருமணம் இந்நிலையில் திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று நமீதாவுக்கும், வீரேந்திர சவுத்திரிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தாலி கட்டும்போது பட்டு நிற சேலையில் ஜொலித்த நமீதா, பிறகு நடைபெற்ற வரவேற்பின்போது நீல நிற சேலையில், மணப்பெண் அலங்காரம் செய்திருந்தார்.

சரத்குமார், ராதிகா பங்கேற்பு இன்று காலை 5.30 மணியளவில் நடைபெற்ற திருமண நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதேநேரம், சினிமா உலகில் இருந்து நடிகர் சரத்குமாரும் அவர் மனைவி நடிகை ராதிகாவும் திருமண விழாவில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here