என் தொப்புள் மீது தேங்காய் வீசினால் திருப்பி அடிப்பேன்: எமிஜாக்சன் ஆவேசம்

0
287

சமீபத்தில் நடிகை டாப்சி அளித்த பேட்டியில் ஒரு தெலுங்கு படத்தில் தனது தொப்புள் மீது தேங்காயை வீசியது போல ஒரு காட்சி எடுத்தது பற்றி குறிப்பிட்டு இருந்தார். இது பிரச்சினை ஆனதால் சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் டாப்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எமி ஜாக்சன் அளித்த பேட்டியில்…

“தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இது தெலுங்கு திரை உலகில் நடந்துள்ளது. தயவு செய்து இது போன்று செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். எனக்கு இது போன்று எதுவும் நடக்கவில்லை. அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இப்படி யாராவது செய்தால் தேங்காயை எடுத்து அவர்கள் மீது வீசி திருப்பி அடிப்பேன்.

இது படம் எடுப்பவர்களுக்கு தெரியும். எனவே, எனக்கு யாரும் அப்படி செய்ய மாட்டார்கள். நான் அருமையான இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். அது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா நடிகைகளுக்கும் இப்படி நடப்பது இல்லை. அது கொடுமையானது. இது போன்று நடப்பது எனக்கு பிடிக்காது” என்று ஆவேசப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here