எந்த வேடமானாலும் நடித்து நிரூபிப்பேன்: கிஷோர் ரவிச்சந்திரன்

0
197

‘ரூபாய்’ படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் கிஷோர் ரவிச்சந்திரன். சினிமாவுக்கு வந்தது பற்றி அவர் கூறுகிறார்…
நான் சென்னையில் படித்து முடித்து விட்டு லண்டன் சென்று எம்.பி.ஏ. படித்தேன். எங்களது குடும்ப நண்பரான சாட்டை எம்.அன்பழகன்.

சினிமாவுக்கு ஏற்ற முகம் உனக்கு இருக்கு நடிக்கிறியா என்று கேட்டார். நடி என்று வற்புறுத்தினார்.
நானும் அரை மனதோடு சரி என்று சொன்னேன். பிரபு சாலமன் சார் லாரி டிரைவர் காரக்டருக்கு சரிப்படுமான்னு பாத்துக்க என்று சொன்னார். அதற்கு பிறகு தேவி ரிக்‌ஷா கூத்து பட்டறையில் ஆறு மாதம் பயிற்சி பெற்றேன். லாரி டிரைவர் வேடம் என்பதால் லாரி ஓட்ட கற்றுக் கொண்டேன். லோடு ஏற்றும் கேரக்டர் என்பதால் நடு ராத்திரி 1 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லுங்கியோடு சென்று அவர்கள் வாழ்க்கையை தெரிந்து கொண்டேன்.

சென்னையில் கடுகு எண்ணெய்யை முகம் உடம்பு முழுக்க தேய்த்துக் கொண்டு பீச்சில் வெயிலில் நின்றேன். கறுத்துப் போய் லாரி டிரைவராக போய் பிரபுசாலமன், அன்பழகன் முன்பு நின்றேன்.. அசந்து போய் உடனே ஓ.கே சொன்னார்கள்.
‘ரூபாய்’ படத்தை பார்த்து விட்டு பிரபுசாலமன் கேரக்டராவே மாறிட்டே என்று பாராட்டினார்.
அடுத்து பிரபு சாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கத்தில் நடிக்கிறேன். எந்த வேடமானாலும் நடித்து என்னை நிரூபிப்பேன். எனக்கு அங்கீகாரம் கொடுத்த பிரபு சாலமன், எம்.அன்பழகன் ஆகியோரை மறக்கமாட்டேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here