எடியூரப்பா தலைமையில் ஆலோசனை

0
69

பெங்களூரு, ஏப். 21-
கர்நாடக மாநில பிஜேபி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.
கர்நாடகத்தின் நஞ்சன் கூடு மற்றும் குண்டல்பேட் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பிஜேபி கட்சி தோல்வி அடைந்து உள்ள நிலையில் இது தொடர்பாகவும் வரும் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் பிஜேபி கட்சி வெற்றி பெற வியூகம் வகுக்கவும் பெங்களூரில் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள மாநில பிஜேபி தலைமை அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தலைவர் எடியூரப்பா தலைமை தாங்குகிறார்.

இதில் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார் சதானந்தகவுடா ரமேஷ் ஜிகஜணகி, ஜெகதீஷ்ஷெட்டர் ஈஸ்வரப்பா மாநில சட்டமன்றம் மேல் சபை பிஜேபி உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here