ஊட்டி சுற்றுலா சென்ற 3 பேர் நசுங்கி சாவு

0
25

மைசூரு, நவ. 14-
மங்களூருவில் இருந்து ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
மங்களூருவில் இருந்து உதகை எனும் ஊட்டிக்கு சுற்றுலாவவாக டெம்போ டிராவலர் வாகனம் ஒன்றில் 16 பேர் பயணம் மேற்கொண்டனர். இவர்களது வாகனம் மைசூர் அருகே உன்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று டெம்போ டிராவலர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேல் வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் உள்ளிட்ட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் பெற்ற உன்சூர் போக்குவரத்துப் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த 7 பயணிகளின் உடல்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 14 பயணிகளை உன்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here