உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததே டெங்கு பரவ காரணம் : ஸ்டாலின் குற்றச்சாட்டு

0
4

சென்னை, அக், 12
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் டெங்குவிற்கு சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தினமும் காய்ச்சல் பாதிப்பால் உயிர் பலி ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு காரணம் என்றார். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் சுகாதார பணிகளில் ஈடுபட்டிருந்தால், டெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.
திமுக சார்பாக நிலவேம்பு கசாயம் அளிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து நோட்டீஸ் அளித்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தை பீடித்துள்ள டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான், டெங்கு நோயும் ஒழியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here