உறவினர் வீட்டுக்கு சென்ற போது சோகம் தருமபுரி: கார் 2பல்டி அடித்து விபத்து

0
91

தருமபுரி,ஜூன்.20
பெங்களூரிலிருந்து கேரளாவில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டுக்கு சென்ற போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு சிறுமி 3 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
பெங்களூரிலிருந்து தங்களது உறவினர் வீட்டுக்கு கேரளாவுக்கு செல்வதற்காக 3 பெண்கள் 3வயது பெண் குழந்தை மற்றும் 3 ஆண்கள் உட்பட 7 பேர் சைலோ காரில் நேற்று இரவு கிளம்பியுள்ளனர்.
@ts = சென்டர் மீடியனில் மோதி விபத்து
இரவு 10 மணியளவில் கார் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை, இழந்து சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி எதிர்புற சாலையில் பாய்ந்து விழுந்தது. அதிவேகமாக பாய்ந்த கார் சாலையில் இரண்டு பல்டி அடித்து கவிழந்தது.காரில் இருந்தவர்கள் அலறியடித்து துடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் இடிபாடுகளுடன் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here