உடல் நலத்துக்கு சைக்கிள் சவாரி:சித்து

0
93

மைசூர், ஜூன்.4-
சைக்கிள்களில் சவாரி செய்யுங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்குமென ட்ரின்… ட்ரின் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூர் ஆன்தின்ச் சர்க்கிள் அருகே சைக்கிளில் அமர்ந்து, பெல் அடித்து ஒரு ரவுண்டு சுற்றி வந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், உடல் நலத்திற்கும் மன வலிமைக்கும் சைக்கிள் சவாரி பயனுள்ளது. சுற்றுச் சூழல் பாதிக்காது செலவும் அதிகரிக்காது. பொதுமக்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சைக்கிள்களில் செல்வதை தொடர வேண்டும்.

இந்த திட்டம் சீனா, ஜப்பான், பாரீஸ், லண்டன், மெக்சிகோ உள்பட பல நாடுகளில் இத்திட்டம் அமலில் உள்ளது.
நமது நாட்டில் போபால், ஜெய்பூர், தாணி, சென்னை புவனேஸ்வர் ஆகிய நகரங்களிலும் சைக்கிள்களில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, கர்நாடகாவிலும் தொடரவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here