உடல் எடையைக் குறைப்பதில் தீவிரம் காட்டும் அனுஷ்கா

0
185

அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி குண்டானார். ‘பாகுபலி-2’ படத்துக்காக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்தார். என்றாலும், உடல் மெலியவில்லை. எனவே, ‘பாகுபலி-2’-ல் அனுஷ்காவின் உடல் தோற்றத்தை குறைத்து காட்ட கோடி கணக்கில் ‘கிராபிக்ஸ்’க்காக செலவு செய்தனர்.

பின்னர் ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, தீவிர உடற்பயிற்சிக்காக ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் அனுஷ்கா அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை அமைத்தார். ஒரு பயிற்சியாளரையும் நியமித்தார்.
இங்கு தினமும் இடைவிடாமல் பயிற்சி செய்தார்.

இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பல மாதங்களாக அவர் செய்த பயிற்சியால் எடை குறைந்து பழைய தோற்றத்துக்கு வந்திருக்கிறார். இதுவரை புதிய படங்களை ஏற்காமல் இருந்த அனுஷ்கா, இப்போது புதிய படங்களுக்கு கதைகேட்க தொடங்கி இருக்கிறார். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here