இஸ்ரோ சதம்: 100-வது செயற்கைக்கோள் வெற்றி

0
20
The Indian Space Research Organisation's (ISRO) earth observation satellite CARTOSAT -2, onboard the Polar Satellite Launch Vehicle (PSLV-C40) along with 28 satellites from six foreign countries including the US, France, Finland, South and Canada, launches at Satish dawan space center in Sriharikota in the state of Andhra Pradesh on January 12, 2018. India's Indian Space Research Organisation's (ISRO) launches its 100th satellite. / AFP PHOTO / ARUN SANKAR

ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12-
கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் சுமந்து சென்ற 31 செயற்கைக்கோள்களில் இஸ்ரோ தயாரித்த 100வது செயற்கைக்கோளும் ஒன்றாகும்.
நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய்தல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

எடை குறைந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும், எடை அதிகம் உள்ள செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் ஏவிவருகிறது. அந்த வகையில், 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
முன்னதாக, வெப்ப தகடு கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்தது. இதனால்,பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை 9.29 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. பின்னர் அதி்ல் இருந்து செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.
இதனை சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்தவாறு விஞ்ஞானிகள் கண்காணித்தனர். கார்ட்டோசாட்-2, செயற்கைகோள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த உடன், வெற்றிகரமாக கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சிவன் பேட்டி:
இதுகுறித்து இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவன் கூறுகையில், ‘‘இஸ்ரோ விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பார்த்தபடி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறினார்.

இன்று விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ரக ராக்கெட், இஸ்ரோவின் 42-வது ராக்கெட் ஆகும். 2018-ல் இஸ்ரோ அனுப்பும் முதல் ராக்கெட் இது. ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்ட 31 செயற்கைக்கோள்களில் இஸ்ரோ தயாரித்த, , கார்ட்டோசாட்-2, 100வது செயற்கைக்கோளாகும்.

பிரதமர் வாழ்த்து
இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது-

‘‘பிஎஸ்எல்வி-சி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் புத்தாண்டில் விண்வெளி ஆய்வின் பயன்கள் நமது குடிமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ட்டோருக்கு சென்றடையட்டும்.
இஸ்ரோவின் 100வது செயற்கைகோள் ஏவப்பட்டது, நமது புகழுக்கும் சாதனைக்கும், இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆய்வு திட்ட பணிகளுக்கும் முக்கியத்துவமாக அமைந்துள்ளது.
நமது வெற்றியில், மற்ற நாடுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது 6 நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைகோள்கள் உட்பட 31 செயற்கைகோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது’’ எனக்கூறியுள்ளார்.

31 செயற்கைக் கோள்கள்
இன்று விண்ணில் செலுத்தப்படும் 31 செயற்கைக் கோள்களில், கார்ட்டோசாட்-2, ஒரு மைக்ரோ செயற்கைக் கோள், ஒரு நானோ செயற்கைக் கோள் ஆகிய மூன்றும் இந்தியாவைச் சேர்ந்தவை. 3 மைக்ரோ செயற்கைக் கோள்கள், 25 நானோ செயற்கைக் கோள்கள் ஆகியவை கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்தவை. இந்திய செயற்கைக் கோளான ‘கார்ட்டோசாட்-2’ புவி கண்காணிப்பு பணிக்காக ஏவப்படுகிறது. இது நில வரைபடம் தயாரித்தல், கடலோர நிலங்களின் பயன்பாடு, ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதற்காக துல்லியமாக படம் எடுக்கும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here