இரட்டை இலை முடக்கம் நீட்டிப்பு

0
46

டெல்லி: ஏப். 21-
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் 8 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் , இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது. இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க இரு அணிக்கு ஜூன் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னைத்தை தற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துள்ளது. ஜூன் 16 ம் தேதி வரை சசிகலா மற்றும் பன்னீர் அணிகள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 16 வரை அவகாசம் தரப்பட்டுள்ளதால் அதுவரை இரட்டை இலை சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய இரு அணிகளும் 8 வாரம் அவகாசம் கோரியிருந்தது.இந்த கோரிக்கையை ஏற்று இரு அணிகளுக்கும் கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இரண்டு அணிகளும் உரிமைகோருவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here