இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அரை நிர்வாணப் போரட்டம்

0
101

கிருஷ்ணகிரி், ஏப்.20
கிருஷ்ணகிரி் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து டெல்லியில் விவசாயகளுக்காக போராடி வரும் அய்யா கண்ணுவின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாய விரோதப் போக்கினை கடைபிடிக்கும் மத்திய அரசினை கண்டித்து சங்கு ஊதி அரை நிர்வாணப் பேராடத்தில் ஈடுப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நூதன தொடர் முழக்கப் போரட்டத்தின் போது ஒன்றிய செயலாளர் சிவராஜ் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெலின் மாநில துணைத் தலைவர் இலகுமையா உள்ளிட்ட பலர் கலந்துக கொண்டு் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்கள் மேலும் இந்தக் கண்டன ஆர்பாட்டத்தின் போது| .மத்திய அரசு உடனடியாக விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் , வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு தலா 25,000 வழங்க வேண்டும்.. தென்னக நதிகளை இணைக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிச்சனைக்கு உடை டியாக போர் கால அடிப்படையில் தீர்வுக்கண வேண்டும். விவசாயிகளுக்காக டெல்லியில் போட்டி வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்7. மழை இன்றி காய்ந்துப் போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here