இந்தியிலும் கலக்கும் இருமுகன்

0
267

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இருமுகன்’. இந்த படம் சமீபத்தில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது.

அதன்பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை இப்படம் படைத்திருககிறது.

இந்தியில் இப்படம் ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017’ என்ற பெயரில் வெளிவந்தது. நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் விக்ரமின் நடிப்பு திறமையை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநில எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் எல்லையும் கடந்து தெற்காசியா முழுமைக்கும் பரவியிருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘சாமி 2’ ஆகிய படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ‘ஸ்கெட்ச்’ படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். ‘சாமி 2’படத்தை இயக்குநர் ஹரி இயக்கவிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here