இந்தியாவில் பயங்கர தாக்குதல்

0
15

வாஷிங்டன், பிப். 14-
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு தலைவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உளவுத்துறை குறித்த செனட் கமிட்டி முன்பு உளவுப்பிரிவு தலைவர் டான் கோட்ஸ் கூறியதாவது: பாகிஸ்தானில், அரசு ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், தங்கள் பதுங்குமிடத்தில் இருந்தவாறு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்து வருகின்றனர். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடரும் அத்துமீறல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here