ஆலப்புழாவில் நடைபெற்ற படகு போட்டி: நேரு கோப்பையை வென்றது எர்ணாகுளம் அணி

0
39

ஆலப்புழா: ஆக.13
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற படகு போட்டியில் எர்ணாகுளம் தொரத்திநாடு போட் கிளப் முதலிடம் பெற்று கோப்பையை வென்றது. ஆலப்புழாவில் நடைபெற்ற 65ம் ஆண்டு நேரு கோப்பைக்கான படகு போட்டியில் 50 சிறிய படகுகள் மற்றும் 20 பாம்பு வடிவிலான படகுகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் குமரகம் வேம்பு நாடு போட் கிளப் எர்ணாகுளம் தொரத்திநாடு போட் கிளப், காரிச்சான் போட் கிளப், ஐஸ்வர்ய போட் கிளப் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.
பாம்பு வடிவிலான படகை வீரர்கள் ஒரே சீராக தொடுப்புகளை போட்டி போட்டுகொண்டு இயக்கியபோது, படகு தண்ணீரை கிழித்து கொண்டு சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த போட்டியில் நான்கு நிமிடம் 17 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்ற எர்ணாகுளம் தொரத்திநாடு போட் கிளப் அணிக்கு நேரு கோப்பையும் 8 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. முன்னதாக போட்டியை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here