ஆர்யா – கேத்ரின் படத்துக்கு 20 டேக்

0
302

ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்கும் படம் ‘கடம்பன்’. இதுபற்றி இயக்குனர் ராகவன் கூறியது: ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படத்தில் கிராமத்து முதியவரின் உளவியல்பற்றி சொன்னேன். கடம்பன் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடும் கதையாக உருவாகிறது.

இதுபற்றி பல்வேறு பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அவர்கள் பிரச்னையை நேரில் அறிவதற்காக தேனியிலிருந்து சேலம் வரை மலைகாடுகளில் நடந்தே சென்று அந்த மக்களை சந்தித்து பேசினேன்.

நாங்கள் நாங்களாகவே வாழ விடுங்கள் என்பதுதான் மலைவாழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதன் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இதன் கதை உருவாகி உள்ளது. பொருத்தமான ஹீரோவை தேடியபோது கதாபாத்திரத்துக்காக எதையும் செய்யத் தயார் என்று ஆர்யா வந்தார். சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் கடம்பனாக மாறிக்காட்டினார்.

காலில் செருப்பு அணியாமல் காடுமேடுகளில் வலியை பொறுத்துக்கொண்டு நடித்தார். 500 அடி பள்ளத்தில் குதிக்கும் காட்சியில் டூப் போடாமல் நடித்தார். 20 டேக்குகள் எடுக்கப்பட்டது. 21வது டேக்தான் ஓகே ஆனது. சலிக்காமல் குதித்தார். ஹீரோயின் கேத்ரின் தெரசாவை இதுவரை இல்லாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் காணலாம். தயாரிப்பு ஆர்.பி.சவுத்ரி. இசை யுவன் சங்கர் ராஜா. தமிழ் புத்தாண்டில் திரைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here