அரசியலில் உபேந்திரா

0
68
UPENDRA ARRIVING FOR PRESS CONFENCE AT UPI RESORT

பெங்களூரு, ஆக. 12-
மக்கள் வரிப்பணம் மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க வேண்டும் வீணாக பாழாக கூடாது என்பதால் புதிய அரசியல் கட்சியை துவக்குகிறேன் இது எனது 50-வது சினிமாவாக கூட இருக்கலாம் என்று கன்னட நடிகர் உபேந்திரா கூறினார்.
பெங்களூரில் ரூபேஸ் ரெசார்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது-

மக்களே மன்னர்கள் என்பதால் பிரஜாகாரணா என்ற பெயரில் இதன் துவக்கமாக வெப்தலம் துவக்கி இருக்கிறேன் நான் துவக்கும் அரசியல் கட்சிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சி துவங்க கட்சிக்கு பெயர், சின்னம் கோரியிருக்கிறேன். முறையாக கிடைத்த பின்னர் அறிவிக்கப்படும். விவசாயம், கல்வி, தொழில் என பல்வேறு துறைகளில் பாதிக்கப்படுவோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

அதற்கான ஒரு அமைப்பு தேவையாய் உள்ளது. அதனால் அரசியல் அமைப்பை துவக்குகிறேன்.
கர்நாடகாவில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகிறார்கள். அந்த தொகை கர்நாடக மக்களுக்குரியது அந்த தொகை சாதாரண மக்களின் மேம்பாட்டுக்கு செல்கிறதா? இல்லையே எனவே அனைத்திலும் வெளிப்படை தன்மை தேவை.

நான் தலைவனல்ல சமூக சேவகனுமல்ல உழைப்போரின் தோழன் அதன் அடையாளமே காக்கிசட்டை அணிகிறேன்.
நியாயத்தை எதிர் நோக்குபவர்கள் அனைவருமே எனது வெப்தலத்தில் ஆன்லைன்னில் என்னை தொடர்பு கொண்டு ஒன்று சேருவோம் உங்களது கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள் அரசியலில் ராஜாக்கள் தேவையில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here