அரக்கோணம் ரெயில் நிலையில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் ரெயில்வே மந்திரியிடம் கோ.அரி எம்.பி. மனு

0
145

புதுடெல்லி,டிச, 30
மத்திய மின்சாரம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயலை அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.மத்திய மின்சாரம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயலை அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
அரக்கோணம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவனந்தபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் சென்னை விரைவு ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். மேலும் சென்னையில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தினமும் சென்று வரும் பிருந்தாவன் விரைவு ரெயில் பாணாவரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரெயிலை திருத்தணி வரை நீட்டிக்க வேண்டும். தென்னக ரெயில்வேயில் பெரிய சந்திப்பாக அரக்கோணம் ரெயில் நிலையம் இருப்பதால் அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து விரைவு, அதிவிரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட மத்திய மந்திரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here