அம்பரீஷ் ரம்யா இடையே கடும் போட்டி

0
55

மண்டியா, நவ.14-
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட நடிகர் அம்பரீஷ் நடிகை ரம்யா ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் 2018ம் ஆண்டு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தொடக்கத்தில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் பிரபல கன்னடத் திரையுலக நடிகரும் முன்னாள் எம்எல்ஏ மற்றும் அமைச்சருமான அம்பரீஷ் மீண்டும் மண்டியா தொகுதியில் இருந்து போட்டியிட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அம்பரீஷ் முதன் முதலாக அரசியல் களத்தில் இறங்கிய காலக் கட்டத்தில் 1996ம் ஆண்டு ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு மற்றும் 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2002ம் ஆண்டு காவிரி நதிநீர்ப் பிரச்சினை காரணமாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அம்பரிஷூக்கு திரையுலக அனுபவம் மற்றும் திரையுலகினர் ஆதரவு மற்றும் மண்டியா மாவட்டத்தில் அவர் சார்ந்த ஒக்கலிகாவினர் அதிகம் உள்ளனர். எனவே அம்பரீஷ் மீண்டும் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகையும் 2013ம் ஆண்டு நடைபெற்ற எம்பி தேர்தலில் வெற்றி பெற்றவருமான நடிகையுமான ரம்யா மண்டியா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக ரம்யா தற்போது மண்டியா தொகுதியில் வித்யாநகர் பகுதியில் புதிய வீடு ஒன்றில் குடியேறியுள்ளார். இதனை தொடர்ந்து ரம்யா தற்போது மண்டியாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் ரம்யா மற்றும் அம்பரீஷ் ஆகிய இருவர் மீதுமே மண்டியாவில் பெரும்பாலானவர்களிடம் அதிருப்தி இருப்பது தெரிய வந்துள்ளது. எது எப்படியான போதிலும் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவை வைத்தே தேர்தல் முடிவு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here