அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு

0
59

திருவண்ணாமலை: ஏப்.20
திருவண்ணாமலை அருகே, அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை ரயில் நிலையத்தில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சென்று பார்த்தனர். அங்கு பிறந்து, நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. இது குறித்து வெறையூர் போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்க, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குழந்தையை அனாதையாக விட்டுச்சென்றது யார்? எதற்காக விட்டுச்சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here